
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அடையாறு, கிண்டி உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து நான்கு வாகனங்களில் சென்ற அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.