அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள பார்வுட் பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்சுதீன்(55), செல்லதுரை(48) ஆகியோர் இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை சம்சுதீனை துரத்திச் சென்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார். மேலும் காட்டுயானை தாக்கியதில் செல்லதுரை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக செல்லதுரையை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்சுதீன் உடல், பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தேயிலை தோட்டத்திற்குள் சுற்றித் திரியும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளி காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா…

திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது- தவெக தலைவர் விஜய் தடாலடி!

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *