வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு- மு.க.ஸ்டாலின் தகவல்

ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளன. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.

மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும். இவை வெறும் எண்ணிக்கை அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடல் அரசின் உத்வேகம் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

நள்ளிரவில் பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து- 15 பேர் உயிரிழப்பு!

கொழும்பு அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொழும்பில் உள்ள டங்கல்லே நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.…

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்- ஆக்ஸ்போர்டு பல்கலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவின் தலைவர் என்ற தகுதியோடு மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *