பயணிகளுக்கு அன்பான அறிவிப்பு- வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு!

மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் செப்.11-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் வருகிற செப்.11-ம்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ம் தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

அதே போல, மங்களூரு சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் (வண்டி எண் 20631, 20632) வருகிற செப்.9-ம் தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Related Posts

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்- செங்கலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மது குடிக்கப் பணம் தர மறுத்த தந்தையின் தலையில் செங்கலை கொண்டு தாக்கி 19 வயது வாலிபன் கொலை செய்த சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சர்பாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம்(43). இவரது மகன் உதய்(19). இவருக்கும்,…

அதிர்ச்சி… டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டிடம்

டெல்லியின் சப்ஜி மண்டியில் இன்று அதிகாலை திடீரென நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தீயணைப்புச் சேவைக்கு இன்று அதிகாலை 3.05…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *