
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சரான விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை இந்த வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதே போல ராஜேஸ்வரி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கும் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மிரட்டல்கள் குறித்து இலுப்பூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள தனியார் பள்ளிக்கும் சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மெயிலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பள்ளியிலும், அதன் பிறகு 20 நிமிடங்களில் திருச்சி நீதிமன்றம் மற்றும் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.