உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு- இந்தியாவிற்கு இத்தனையாவது இடமா?

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை உலக அமைதி குறியீடு  வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது.

உலகின் பாதுகாப்பான நாடு  குறித்த தரிவரிசையை 2025 உலக அமைதி குறியீடு வெளியிட்டுள்ளது. ராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை, பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களின்படி 163 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன்படி உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் முதலிடத்தில் இருப்பது ஐஸ்லாந்து. இந்த நாடு கடந்த 2008-ம் ஆண்டு முதல் முதலிடத்தைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் மட்டும் தான். இந்தப் பட்டியலில் இந்தியா 115-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 144 வது இடத்திலும், கடைசி இடத்திலும்(163) ரஷ்யாவும் உள்ளன.

Related Posts

ஒரு சவரன் தங்கம் விலை 81 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது- பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 81,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த மாதம் 26-ம்…

இப்படியே போனால் எப்படி? – ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80,040

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 10,005 ரூபாய் உயர்ந்ததால், ஒரு சவரன் 80,400 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *