மாதம் ரு.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம்… பவர்கிரிட்டில் 1543 பணியிடங்கள் காலி!

இந்திய மின் கட்டமைப்பு கழகம் (பவர்கிரிட்) நிறுவனத்தில் 1543 பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர்கிரிட் என்பது இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் . இது முக்கியமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மொத்த மின்சாரத்தை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது, இந்த நிறுவனத்தில் களப் பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 1543 பணியிடங்களில் களப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) -532, களப் பொறியாளர் (சிவில்)- 198, கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல்) -535, கள மேற்பார்வையாளர் (சிவில்) -193, கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்) – 85.  இதில் களப் பொறியாளர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் மின் துறையில் முழுநேர பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். களப் பொறியாளர் (சிவில்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் பிரிவில் முழுநேர பி.இ /பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி) முடித்திருக்க வேண்டும். களப் பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. பவர்கிரிட் நிறுவனத்தில் களப் பொறியாளர் பணிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள மேற்பார்வையாளர் பணிக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். களப் பொறியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.கள மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கள மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறத. இதற்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 17-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”

அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *