தமிழ்நாட்டில் 38 டோல்கேட்டுகளில் நள்ளிரவு முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் உள்ள 38 டோல்கேட்டுகளில் (சுங்கச்சாவடி) கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிள்ணுள இதில் உள்ள 892 டோல்கேட்டுகளில் 675 டோல்கேட்டுகள் பொதுநிதியளிப்பு பிரிவிலும், 180 டோல்கேட்டுகள் அரசின் சலுகை பெற்றும் செயல்படுகின்றன.

இந்த டோல்கேட்டுகளை தனியார் நிறுவனங்களிலும் ஒப்படைத்து கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 டோல்கேட்டுகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த 1992-ம்ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 டோல்கேட்டுகளில் சுங்கக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்கேட்டில் கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105, பல முறை பயணிக்க புதிய கட்டணம் ரூ.160 (பழைய கட்டணம் ரூ.155), மாதாந்திர கட்டணம் ரூ.3,170 (ரூ.3,100) இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180), பல முறை பயணிக்க ரூ.275 (ரூ.270), மாதாந்திர கட்டணம் ரூ.5,545 (ரூ.5,420), லாரி, பஸ் ஒரு வழி கட்டணம் ரூ.370 (ரூ.360), பல முறை பயணிக்க ரூ.555 (ரூ.540), பல அச்சு வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.595 (ரூ.580), பல முறை பயணிக்க ரூ.890 (ரூ.870), மாதாந்திர கட்டணம் ரூ.17,820 (ரூ.17,425). இதன்படி ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரை – எலியார்பத்தி டோல்கேட்டில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணத்தில் இருந்து ஒரு முறை, இருமுறை பயணத்திற்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் ரூ.65 கூடுதல் வசூலிக்கப்படுகிறது. இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருமுறை பயணத்திற்கு ரூ.5, மாதாந்திர கட்டணம் ரூ.105 கூடுதல் வசூலிக்கப்பட உள்ளது. லாரி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.10 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.215 வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு அச்சு, மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.20 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.345 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. நள்ளிரவு முதல் அமலாகியுள்ள இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Related Posts

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா…

அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *