
சீனாவில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது என்பதை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் வர்த்தகம், நிதி பங்களிப்பு, முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி சீனா செல்கிறார். அங்குள்ள தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சீனா சென்று அந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளார். மொத்தம் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, ‘ செப்.1-ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப்பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது’ என்று கூறினார்.