
உக்ரைன் மீது ட்ரோன், ஏவுகணை மூலம் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த இருநாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முன்முயற்சி டுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக கடந்த 19-ம் தேதி உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து உக்ரைன், ரஷ்யா இடையிலான மோதல் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணைகள்நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் உக்ரைனில் ஏராளமான கட்டிங்கள் நொறுங்கி விழுந்தன. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.