பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் – கண்ணூர் ஒரு வழிப்பாதை சிறப்பு ரயில் (வண்டி எண் 06009) இயக்கப்படும். இந்த ரயில் இன்று (ஆக.28) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

கண்ணூர்- பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் கண்ணூர்- பெங்களூரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06125) நாளை (ஆக.29) இரவு 9.30 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக 30 ந் தேதி காலை 5.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் பெங்களூரு – கண்ணூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06126) நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 10.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின்  சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…

வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *