அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின் வருத்தம்

அமெரிக்காவின் வரி உயர்வால் திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

காலையிலேயே குட்நியூஸ்… கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த…

புதிய வரலாறு படைத்தார் எலான் மாஸ்க்… சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்!

உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துடன் உலா வரும் எலான் மஸ்க் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளளார். அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *