
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செப்.2-ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவராக உள்ள திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் செப்.2-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். இதனைத் தொடர்ந்து செப்.3-ம் தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.