பெட்டி, பெட்டியாக சிக்கிய 2 ஆயிரம் கிலோ வெடிமருந்து… கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தல்!

கோவை அருகே வேனில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிப்பொருள் கடத்தப்படுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வெடிபொருட்கள் கடத்துபவர்களை பிடிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் களத்தில் இறங்கினர். இன்று அதிகாலை 4 மணியளவில் கேரளாவை நோக்கிச் சென்ற வேனை மதுக்கரை அருகே தடுத்து நிறுத்தினர்.

அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவை சட்டவிரோதமாக கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனை வெடிபொருட்களுடன் பறிமுதல் செய்து மதுக்கரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மலப்புரத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சுபேரையும் கைது செய்தனர். நாசவேலைக்காக இந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கேரளாவில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளை எடுத்துச் செல்வதாக வேன் ஓட்டுநர் சுபேர் கூறினார். ஆனால், அந்த வெடிபொருட்களுக்குரிய உரிமம், ஆவணங்கள் உள்ளதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *