நகர்ப்புற பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் கடந்த 15.9.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கடந்த 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் நடந்தது. இவ்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்தினர். இந்த திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Posts

டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் – ஆசிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆசிரியராக பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் ஆண்டு தோறும் டெட் ( Teachers Eligibility Test) எனப்படும்…

அடிதடி- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலையடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *