
பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி.கே. மணி வானகரம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினரான இவர் பாமக நிறுவன தலைவர் ஜி.கே.மணிக்கும், அவரது மகன் ராமதாஸ்க்கும் இடையே நடக்கும் மோதலை தீர்ப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் தருமபுரியில் நேற்று இரவு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஜி.கே.மணி சென்றிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாகவும், முதுகு தண்டு வலிப்பதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து வருன்றனர். அவரது உடல்நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.