
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்ததால் ஒரு சவரன் 74,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை இந்தியாவில் சர்வதேச அளவிலான வணிகச் சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக 75,760 ரூபாயாக உயர்ந்தது. கடந்த 8- ம் தேதி வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச இந்த விலை உயர்வை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 20- ம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் 9,180 ரூபாய்க்கும், சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 73,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 9,315 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.