
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், கண்ணகி நகரில் வேலைக்குச் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததில் தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் சம்பவ இடத்திலேயே நேற்று பலியானார். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், வரலட்சுமி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது உறிவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில் 10 லட்ச ரூபாய், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் 10 லட்ச ரூபாய் என 20 லட்ச ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.