
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
மதுரை பாரபத்தியில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். கடும் வெயிலால் பலர் மயங்கி விழுந்தனர். இந்த நிலையில், மாநாட்டு மேடைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு கட்சி தலைவர் நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சத்தமில்லாமல் சாதித்து கோடிக்கான தாய்மார்களின் அன்பை பெற்ற விஜய், விஜய் தொடங்கியிருப்பது கட்சி இல்லை.., புரட்சி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வது உறுதி. அதற்கு வரும் நாள்களில் தவெகவினர் வியர்வை சிந்தி கடுமையாக உழைக்க வேண்டும். இது பாசத்திற்குக் கட்டுப்படும் ராணுவப்படை என்றார்.