
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாப்பரத்தியில் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பாடலுக்கு பின் தவெக தலைவர் விஜய் கட்சியின் கொடியை ஏற்றினார். அதற்கு முன்பு மாநாட்டு திடலில் குவிந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் ராம்ப் வால்க் சென்றார். அப்போது தொண்டர்கள் பலர், அவரை நோக்கி ஓடி வந்தனர். ஆனால், பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனாலும் சிலர் விஜய்க்கு துண்டு, மாலை அணிவித்தனர்.
கடும் வெயில் காரணமாக 230-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த ஒருவர் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.