10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு போலீஸ் வேலை- 3,665 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு 3,665 காவலர் பணியிடங்களை நிரப்பும் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு முடித்து காவல்துறை பணிக்கு காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 – 67,100/- வழங்கப்படும். தேர்வர்கள் நாளை முதல் வரும் செப்.21- ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”

அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *