தவெக மாநாட்டு திடலில் பயங்கரம்… 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து

மதுரையில்  தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து கார் அப்பளம் போல் நொறுங்கியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை (ஆக.21) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறும் திடலைச் சுற்றி கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென்று மாநாட்டுத் திடலில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3,500 காவலர்கள் ஈடுபடவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநாட்டு அரங்கில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடும் பணி பொதுச்செயலாளர் ஆனந்த் மேற்பார்வையில்  இன்று நடைபெற்றது. கிரேன் மூலம் 100 அடி கொடிக்கம்பத்தை நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென ரோப் அறுந்ததால் கொடிக்கம்பம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. இதில் அங்கு நின்ற  கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *