தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக இப்பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் வருகைக்கான காரணம், எங்கு உள்ளனர், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை, என்ன பணி செய்கின்றனர் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால்,…

ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *