
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது (80).
கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரேணுகாதேவி காலமானார். இந்நிலையில் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.