
வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இந்த புயல் சின்னம் வரும் 19-ம் தேதி முற்பகல் வாக்கில் தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இது கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.