ஐ.பி வீட்டில் நடக்கும் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை- செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்க துறையினர் சோதனை என கூறப்படுகிறது.

இந்த சோதனை சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி உறவினர்களுக்கு சொந்தமான வீடு, மில் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ”தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுகவின் மூத்தத் தலைவருமான ஐ.பெரியசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *