தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று (அக்.20) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி…
வங்க கடலில் புயல் சின்னம்… 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று (அக்.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
புஸ்ஸி ஆனந்த் வேண்டாம்!- கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்
தவெக கட்சியை விட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…
தேசிய விருது வென்ற படத்தின் 2ம் பாகம் : படப்பிடிப்பு நிறைவு
தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. தேசிய விருது :- கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…
தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி- எடப்பாடி பழனிசாமி வேதனை
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும்…
நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டம்…4 பேர் உயிரிழப்பு
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டமானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் தண்டுரை விவசாயி தெருவில் ஒரு வீட்டில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டு வெடி…
தீபாவளியன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை
ங்கக்கடலில் அக்.21-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இன்று 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா…
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பஞ்சாயத்து அலுவலர் சஸ்பெண்ட்
கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும்…
கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணம் போடுவது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி
கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அப்போது துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய…
தீபாவளி… புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அரசு விடுமுறை!
தீபாவளி கொண்டாட்டம் காரணமாக தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும்…










