ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23…
ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் சீனாவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்திய…
கிழக்கு ஆப்கானிஸ்தானை கிடுகிடுக்க வைத்த நிலநடுக்கம்- வீடுகளுக்குள் புதைந்து 20 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் வீடுகள் இடிந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள…
வரி விதிக்க டிரம்பிற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை- சாட்டையை சொடுக்கிய அமெரிக்கா நீதிமன்றம்
அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் , பல்வேறு நாடுகளுக்கு அளவிற்கு அதிகமான வரிகளை விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது…
சீனாவில் மோடி-விளாடிமிர் புதின் சந்திப்பு – உறுதி செய்தது ரஷ்யா!
சீனாவில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது என்பதை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு…
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி
உக்ரைன் மீது ட்ரோன், ஏவுகணை மூலம் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த மூன்று…
ப்ளீஸ் வேண்டாம்…. பயணிகளின் உயிருக்கு ஆபத்து- இலங்கை விமானப்படை எச்சரிக்கை
விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் விடுவதால் விமான போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை விமானப்படை எச்சரித்துள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக…
கச்சத்தீவை விட்டுக் கொடுக்க மாட்டோம்- நடிகர் விஜய்க்கு இலங்கை பதிலடி
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி தந்துள்ளார். மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய…
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் ஐந்தா, ஏழா?…. டிரம்பின் பேச்சால் குழப்பம்!
இந்தியா, பாகிஸ்தான் சண்டையின் போது 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆபரேஷன்…
நியூயார்க்கில் பயங்கர விபத்து – பேருந்து கவிழ்ந்து 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்து விட்டு நியூயார்க் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்கா. கனடா எல்லையில் உள்ள உயரமான நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…