தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாக 7 கேள்வி!

பிஹாரில் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.…

நம்மால் அரசியல் வரலாறு நிகழப்போவது நிஜம்- தவெக தலைவர் விஜய் கடிதம்

மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம் என்று கட்சி தொண்டர்களுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் ஆக.21-ம்…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட ராஜ்நாத் சிங்!

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர், தனது பதவியை கடந்த மாதம்…

பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடிக்கும்- இ-மெயில் மிரட்டலால் பரபரப்பு!

டெல்லியில் இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,…

எச்சரிக்கும் வானிலை மையம்- வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் சின்னம்

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று…

துணை ஜனாதிபதி தேர்தல் – பொது வேட்பாளரை களமிறக்குகிறதா இந்தியா கூட்டணி?

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…

தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன்: சொல்கிறார் டி.டி.வி தினகரன்

சட்டமன்ற தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன். அது எந்த தொகுதி என்பது அடுத்த 2026 ஜனவரி மாதம் உங்களுக்கு தெரியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

குட்நியூஸ்… தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவர்கள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் உள்ளவர்கள் தங்கள்…

ஐ.பி வீட்டில் நடக்கும் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை- செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில்…

கடும் நெருக்கடியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு 25 சதவீத வரி…